Thursday, January 21, 2010
Trinco executions added to Sri Lanka's war crimes record in Dublin
TamilNet, Tuesday, 19 January 2010, 01:17 GMT]
An affidavit containing the personal testimony of Dr Manoharan, the father of Ragihar, one of the five high school students shot dead in execution style in Trincomalee beach nearly four years ago by members of Sri Lanka security forces, and two detailed reports of evidence collected on the killings by a Rights Group whose members are in self-exile due to threat to their lives, were submitted as record of evidence to the Dublin war-crimes tribunal hearing concluded on the 16th of this month, US-based pressure group Tamils Against Genocide (TAG) said Tuesday.
Dr Manoharan and the surviving members of the family were relocated to UK with the assistance of a UN organization after the killings to escape intimidation by the Sri Lanka security forces against Dr Manoharan legally pursuing the killers of his son.
The report documents the names and the date of birth of the five students killed on 2nd January 2006 in Trincomalee, a big harbor town under the control of and heavily garrisoned by the Sri Lanka security forces, as:
* Manoharan Ragihar 22.09.1985
* Yogarajah Hemachchandra 04.03.1985
* Logitharajah Rohan 07.04.1985
* Thangathurai Sivanantha 06.04.1985
* Shanmugarajah Gajendran 16.09.1985 \
Dr Manoharan's affidavit details the events of 2nd January 2006 from the time Ragihar left his home at 6:00 p.m. to visit the Ganesha temple to attend the Hindu's customary festival during new year fasting, the hearing of explosion at around 7:35 p.m., Ragihar's call to his father on the cell phone informing him that soldiers were around him, desperate and failed attempts to get through the checkpoint to see if his son was there near the Gandhi statue, to the time he identified Ragihar's body in the hospital.
he affidavit further describes the interaction with the security forces and the attempt by Minister of Human Rights Mr Samarasinghe in April of 2006 offering Dr Manoharan family a "nice house in Colombo," "a nice school" for his children, encouraging him to "move on after the incident."
The report identifies Superintendent of Police, Kapila Jayasekere, naval officer Udawatte Weerakody, "leader of the killer team" Vas Perera, DIG Abeywardena, and DIG and JHU member HMGB Kotakadeniya as culpable individuals for the crime among other higher level officials, military and political, who bear command responsibility established by the Hague Conventions IV (1907) and X (1907) for war crimes.
Two complete investigative reports dated 19th April 2007 and 2nd January 2010 and produced by UTHR, a Rights Group in Sri Lanka whose members are in exile, were included in the submission to provide the tribunal judges a full account of information available on the alleged war-crime by Sri Lanka security forces.
Thursday, January 14, 2010
Sri Lanka: A Bitter Peace
Asia Briefing N°99
11 January 2010
OVERVIEW
Since the decisive military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Sri Lanka has made little progress in reconstructing its battered democratic institutions or establishing conditions for a stable peace. Eight months later, the post-war policies of President Mahinda Rajapaksa have deepened rather than resolved the grievances that generated and sustained LTTE militancy. While the LTTE’s defeat and the end of its control over Tamil political life are historic and welcome changes, the victory over Tamil militancy will remain fragile unless Sinhalese-dominated political parties make strong moves towards a more inclusive and democratic state. The emergence of retired General Sarath Fonseka to challenge Rajapaksa in the 26 January presidential election has opened new space to challenge repressive government policies. But neither has offered credible proposals for political reforms that would address the marginalisation of Tamils and other minorities. Whoever wins, donor governments and international institutions should use their development assistance to support reforms designed to protect the democratic rights of all of Sri Lanka’s citizens and ethnic communities.
The government’s internment of more than a quarter million Tamils displaced from the Northern Province – some for more than six months – was further humiliation for a population brutalised by months of ferocious fighting. The return by the end of 2009 of most of the displaced to their home districts, and the increased freedom of movement for the nearly 100,000 still in military-run camps, are important steps forward. However, the resettlement process has failed to meet international standards for safe and dignified returns. There has been little or no consultation with the displaced and no independent monitoring; many returns have been to areas not cleared of mines and unexploded ordnance; inadequate financial resources have been provided for those returning home; and the military continues to control people’s movements. These and other concerns also apply to the estimated 80,000 Muslims forcibly expelled from the north by the LTTE in 1990, some of whom have begun to return to their homes.
The UN and donor governments should insist more strongly that all resettlement is done according to established guiding principles. Donors should end assistance to any camps where full freedom of movement is not allowed and condition additional aid on an effective monitoring role for UN agencies and NGO partners. India, Japan, Western donors, the World Bank and the Asian Development Bank should tie additional development assistance to an inclusive and consultative planning process for the reconstruction of the north. Access by the International Committee of the Red Cross (ICRC) to the more than 12,000 Tamils held in irregular detention centres on suspicion of ties to the LTTE is also essential.
The government’s approach to the development and reconstruction of the north and east is contributing to minority fears and alienation. Government plans remain unclear, with local communities and political leaders not consulted and even donors not informed of overall reconstruction plans. Strong military influence over policies, tight military control over the population and restrictions on local and international NGOs increase the risk of land conflicts, with the strong possibility of demographic changes that would dilute the Tamil character of the north. No real space has been given to Tamil and Muslim political or community leaders in the north and very little in the east.
The Rajapaksa government has initiated no political reforms to address Tamil and other minorities’ concerns. The government-sponsored All Party Representative Committee (APRC) designed to craft constitutional reforms has in effect ended with no sign of an alternative process. Tamil and Muslim parties remain weak and divided, although recent encouraging initiatives to develop a common platform and build trust among Tamil-speaking parties deserve support. Inside and outside Sri Lanka, many Tamils remain angry at the lack of accounting or justice for the thousands of civilians killed in the final months of the war. Most of the million-strong diaspora is still committed to a separate state and many would be willing to support renewed violence.
The brutal nature of the conflict, especially in its closing months, has undermined Sri Lanka’s democratic institutions and governance. All ethnic communities are suffering from the collapse of the rule of law. Disappearances and political killings associated with the government’s counter-insurgency campaign have been greatly reduced since the end of the war. Impunity for abuses by state officials continues, however, and fear and self-censorship among civil society activists and political dissidents remain widespread. Rajapaksa’s government continues to maintain and use the Prevention of Terrorism Act and Emergency Regulations to weaken its political opposition.
The campaign of retired General Sarath Fonseka has put the Rajapaksas on the defensive and united a long-dormant opposition. Alleging corruption and other abuses of power by the Rajapaksa family, Fonseka and the parties supporting him promise major reforms, including the end of emergency rule and the abolition of the Executive Presidency itself. However, Fonseka’s candidacy suffers from contradictions and poses grave risks. Promises made to Tamil parties to restore civilian control over land policies and the resettlement process in the north threaten to put Fonseka at odds with his allies in the military and run directly counter to Fonseka’s consistently Sinhala nationalist policies over the course of his career. The numerous allegations that General Fonseka was involved in attacks on journalists and other human rights violations undermine his calls for reforms and an end to impunity. It remains an open question whether the ideologically diverse set of parties that have endorsed Fonseka will be able to work together or influence his policies should he win.
International actors need to press for accountability for abuses by both sides during the war as well as challenge the government’s post-war policies. Numerous states with insurgencies have begun to look at Sri Lanka as a model. India and Western governments may yet come to regret giving Sri Lanka the green light – and even assisting it – to fight a “war on terror” prior to the government agreeing to political reforms or showing any commitment to the rule of law, constitutional norms or respect for human rights. The precedent can and should be challenged. Donors should condition further development assistance on governance reforms designed to curb impunity and make government accountable to citizens of all communities. This could eventually help open the space for Tamil and Muslim political leaders to organise effectively now that the LTTE is no longer there to control their agenda.
Tuesday, January 12, 2010
மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம்
இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசரமாக அல்ஸ்ரன் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அதன் தாக்கம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர விதிமுறைகளை அல்ஸ்ரன் மீறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் இந்த விவகாரத்தை ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னர் எம்மை தொடர்பு கொண்டு நடைமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும். சுயாதீன நிபுணர்களின் முடிவுகள் தொடர்பாக பிலிப் அல்ஸ்ரன் எம்முடன்தான் முதலில் தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அல்ஸ்ரனின் அறிக்கை தெளிவானது.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துவரப்பட்டு அவர்களை மண்டியிட வைத்து பின்தலையில் ரி56 ரக துப்பாக்கியால் சீருடையினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகளும், அதனை சுற்றி நிற்போர் பார்த்து ரசிக்கும் காட்சிகளும் உலகில் பரந்து வாழும் தமிழ் இனத்தை மட்டுமல்லாது உலகின் மனித சமுதாயத்தின் இத யங்களை உலுக்கியிருந்தது.
இந்த வீடியோ தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தது.
விசாரணைகளின் முடிவில் வீடியோ பொய்யானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்த போதும் அதனை ஐ.நா. ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஐ.நா. சில காரணங்களையும் முன்வைத்துள்ளது. அதாவது, விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த மூன்று பேரில் இருவர் படை அதிகாரிகள் என்பதே அதுவாகும்.
அதனைத் தொடர்ந்து ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் தனது மேற்பார்வையில் மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார்.
காயங்கள் மற்றும் நோய்கள் தொடர்பான குற்றப்பிரிவு அதிகாரி கலாநிதி டானியல் ஸ்பிற்ஸ், காணொளி பகுப்பாய்வாளர் ஸ்பைவக், துப்பாக்கி பிரயோக தடயவியல் நிபுணர் பீற்றர் டியக்சு ஆகியோர் கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வீடியோ உண்மையானது என்பதை உறுதி செய்துள்ளனர்.
துப்பாக்கியின் பின்உதைப்பு, அதன் அசைவு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரின் அசைவு, துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட வாயு என்பவற்றை ஆராய்ந்ததில் உயிர்க்கொல்லி சன்னங்கள் மூலம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தமுடியும் என பீற்றர் டியக்சு தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல் அசைவுகள், எதிர்த்தாக்கம், குருதி வெளியேறிய முறைகளை ஆய்வு செய்ததில் மேற்படி வீடியோ உண்மையானது என்ற முடிவுக்கு தான் வருவதாக கலாநிதி டானியல் ஸ்பிற்ஸ் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரனை பொறுத்த வரையில் அவர் நியூயோர்க் பல்கலைக்கழ கத்தின் சட்டத்துறை கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றியதுடன், அவுஸ்திரேலியா உட்பட பல பல்கலைக்கழகங்களில் சட்டவியல் பேராசிரியராக கடமையாற்றியவர். அனைத்துலக சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பல சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப்புறம்பான மற்றும் எழுந்தமானமான படுகொலைகளுக்கு எதிரான சிறப்பு பிரதிநிதியாக 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பின்னர் ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் படுகொலைகள் தொடர்பில் அவர் அதிக அக்கறை காட்டி வந்துள்ளார். நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பில் சட்டவிதிகளையும் அவர் வரைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் மனித உரிமைகள் மற்றும் உலக நீதி மையத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களின் தலைவராகவும் அவர் சாரா கினுக்கி என்பவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.எனவே பிலிப் அல்ஸ்ரன் மீது சேறு பூசு வதோ அல்லது அவரை புலியாக்குவதோ எதிர்மறையான விளைவுகளைத்தான் கொண்டுவரும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கும். மேலும் அண்மையில் ஐ.நா.வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டதும் நாம் அறிந்ததே.
இலங்கை தொடர்பான மேற்குலக மற்றும் ஐ.நா.வின் நடவடிக்கைகளை பொறுத்தவøரயில் சாண் இறங்குவது முழம் ஏறுவது என்ற கொள்கையைத் தான் பின்பற்றி வருகின்றன. (முன்னர் அவை சாண் ஏறுவது முழம் இறங்குவதையே பின்பற்றியிருந்தன). இது அவர்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமாகவே நோக்கப்படுகின்றது. எனவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஐ.நா.வும், மேற்குலகமும் சில விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு பணிந்து போவது போலவும், உதவிகளை மேற்கொள்ளப்போவது போலவும் தோன்றலாம்.
ஆனால், அவர்களின் பிடிகள் மெல்ல மெல்ல இறுகி வருவதைத்தான் அண்மைய சம்பவங்கள் மூலம் உணர முடிந்துள்ளது. பொருளாதார மற்றும் படைத்துறை உதவிகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற போர்வையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆளுமையை வலுப்படுத்த சீனாவும் இந்தியாவும் முனைந்து வரும்போது மனித உரிமைகள் என்ற அஸ்திரத்துடன் மேற்குலகம் ஆசியப் பிராந்தியத்திற்குள் நுழையப்போகின்றது.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா முதன் முதலாக இணைந்து கொண்டதன் பின்னணியும் அதுதான். இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை புறந்தள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் அதனை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற வட்டத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் வலுவான ஆதாரம் ஒன்றை அல்ஸ்ரன் முன்வைத்துள்ளதாகவும், எனவே இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபையும் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 11 நீதிபதிகள் தலைமையில் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரில் ஆரம்பமாகவுள்ள இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பõன விசாரணைகள் என்பது ஒரு ஆரம்பமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்குலகத்தினதும், ஐ.நா.வினதும் இந்த நகர்வுகளின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புகள் அதிகரித்து வருவதும் தமிழ் மக்களுக்கு அனுகூலமானதாகவே அமைந்துள்ளது.
இதனிடையே அல்ஸ்ரன் மேற்கொண்ட அறிவித்தலும், ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையும் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அர சாங்கத்துக்கு பாதகமான நிலையை உருவாக்கும் எனக் கருதப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தென்னிலங்கை மக்களின் பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பாக பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயம் அல்ஸ்ரனின் அறிவித்தல் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பல அச்சங்களை ஏற்படுத்தலாம்.
மெல்ல மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் அரசாங்கத்தின் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவுகள் அதிகரித்து வருவதும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்களை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.அரசியல் தீர்வு மனிதாபிமான நெருக்கடிகளுக்கான தீர்வு என பல விடயங்களை முன்நிறுத்தி இந்த ஆதரவுகளை வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. கூட்டமைபின் இந்த முடிவானது சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட மிக நல்ல முடிவு. அண்மைக்காலத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஒரு முக்கிய திருப்பமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான செயற்படும் சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆவல். இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆட்சிமாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான சூழ்நிலையையும், அதன் அடுத்த நகர்வாக அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க முடியும்.
பூகோள அரசியல் முனைவாக்கத்தில் சிக்கிப்போயுள்ள இலங்கை அரசியலில் தமிழ் மக்கள் தமக்கான இடத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் தோற்றம்பெற்றுள்ள முனைவாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும். மேற்குலகம், ஐக்கிய நாடுகள் இவற்றின் பிரவேசம் பிராந்திய வல்லரசுகளின் ஒருபக்க சார்புநிலை அரசியலின் மாற்றத்திற்கு மிகச்சிறந்த மருந்தாக அமையும்.
அதன் முதல் படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே அமையப்போகின்றது. தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இலங்கையில் ஒரு முழுமையான ஜனநாயகத்தை செயற்படுத்துவதற்கு அனைத்துலக மனிதநேய அமைப்புக்களும், மேற்குலகமும் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றன.
- வேல்ஸிலிருந்து அருஷ்
Saturday, January 9, 2010
முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா?
கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது.
முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம்.
இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர்.
இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம்.
மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம்.
1.முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?
2.உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?
3.உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா?
4.முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?
பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்.
நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள்.
இலங்கையின் நிலைமை:
ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை. காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம்.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது, அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும், 1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது.
ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும். இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்..
இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம்.
முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம்.
1.சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர்.
2.இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.
3.100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம்.
4.இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.
5.ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
6.இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம்.
7.இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது.
8.எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும், என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல.
எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும்.
- பேராசிரியர் தீரன்
Thursday, January 7, 2010
War Crimes Video is Authentic
http://www.tamilnet.com/img/publish/2009/08/killings_by_SLA.3gp
Video footage that appears to show Sri Lankan troops committing war crimes by summarily executing captured Tamil Tiger fighters on the battlefield was not fabricated, as claimed by the Sri Lankan Government, an investigation by The Times has found.
The findings come after General Sarath Fonseka, the former head of the army, alleged that Gotabhaya Rajapaksa, the Defence Minister, had ordered that surrendering Tiger leaders be killed rather than taken prisoner in the final days of the brutal 26-year civil war that ended in May.
The claims, vehemently denied by the Government, added to a lengthy list of war crimes allegations against it.
The video of the alleged battlefield executions, which was aired on Channel 4 in August, shows a naked man, bound and blindfolded, being made to kneel.
Another man, dressed in what appears to be Sri Lankan army uniform, approaches from behind and shoots him in the head at point-blank range. “It’s like he jumped,” the executor laughs. The camera then pans to show eight similarly bound corpses.
It is impossible to confirm when and where the filming occurred or the identities of the men shown. Pro-Tamil groups alleged that the video was filmed by troops on a mobile phone in January, when they overran the Tiger stronghold of Kilinochchi in the north of the country. Those claims were denied by government officials, who said they had “established beyond doubt” that the footage was fake.
An analysis for The Times by Grant Fredericks, an independent forensic video specialist who is also an instructor at the FBI National Academy, suggests otherwise. He found no evidence of digital manipulation, editing or any other special effects. However, subtle details consistent with a real shooting, such as a discharge of gas from the barrel of the weapon used, were visible.
“This level of subtle detail cannot be virtually reproduced. This is clearly an original recording,” said Mr Fredericks, who was previously the head of the Vancouver police forensic video unit in Canada.
There was also strong evidence to rule out the use of actors. “Even if the weapons fired blanks, the barrel is so close to the head of the ‘actors’ that the gas discharge alone leaves the weapon with such force it would likely cause serious injury or death,” Mr Fredericks said.
The reactions of those executed was consistent with reality, he added. “The victims do not lunge forward . . . [they] fall backward in a very realistic reaction, unlike what is normally depicted in the movies.”
In Mr Fredericks’s opinion “the injury to the head of the second victim and the oozing liquid from that injury cannot be reproduced realistically without editing cuts, camera angle changes and special effects. No [errors] exist anywhere in any of the images that support a technical fabrication of the events depicted,” he said.
The Sri Lankan Government said in a statement in September that the footage was “done with a sophisticated video camera, dubbed to give the gunshot effect and transferred to a mobile phone.”
Mr Fredericks’s research showed that code embedded in the footage appeared to match with software used in Nokia mobile phones.” He said: “The recording is completely consistent with a cell phone video recording and there are no signs of editing or alterations.”
The strong evidence that the footage does show real executions could reinforce international calls for an independent war crimes investigation — something that the Sri Lanka Government has resisted. A Sri Lankan army spokesman requested that a copy of Mr Fredericks’s report be sent to him yesterday, but did not reply when it was.
Mr Fonseka, who resigned from the army last month after being sidelined, is campaigning to unseat President Rajapaksa, the Defence Minister’s brother, at elections next month.
Subscribe to:
Posts (Atom)